பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது!

யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணி தகராறு சம்பவம் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின்போது துப்பாக்கி காட்டி இரண்டு பெண்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அர்ச்சுனா மீது கல்வீசி தாக்கியமை, அத்துமீறி காணிக்குள் புகுந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சம்பந்தப்பட்ட பெண்களில் ஒருவரும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

தனக்கு சொந்தமான நிலத்தை சுத்தப்படுத்த முயன்றபோது, மற்றொரு தரப்பும் அதற்கு உரிமை கோரியதால் இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது இரண்டு பெண்கள் எதிர்த்து வாதிட்டதால், சூழ்நிலை பதற்றமடைந்துள்ளது.

சாட்சி வாக்குமூலங்களின் படி, வாக்குவாதத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதோடு துப்பாக்கியும் பொலிசாரல் மீளப்பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மல்லாகம் நீதவான் முன்பதாக அந்த நிலம் எம்.பிக்கு சொந்தமானது என்றும், கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கியிருந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version