இலங்கையின் துணை நிதி அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (27.04) வெளியிட்ட தகவலின்படி, ‘Rebuilding Sri Lanka’ நிதியம் பாதுகாப்பாகவும் உறுதியாகவும் இருப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று ஊடகங்களைச் சந்தித்து கருத்து தெரிவித்த அவர், இந்த நிதியத்துடன் தொடர்புடைய அனைத்து செலவுகளும் பாராளுமன்ற அனுமதிக்கும் மற்றும் நடைமுறையில் உள்ள சட்ட வரம்புகளுக்கும் உட்பட்டவை எனக் கூறினார்.
2026 ஏப்ரல் 24 ஆம் திகதி நிலவரப்படி, இந்த நிதியத்தில் மொத்தமாக ரூ. 9,583 மில்லியன் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 49 நாடுகளிலிருந்தும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்தும் , இந்த நிதிக்கு பங்களிப்புகள் கிடைத்துள்ளதாகவும் சில நன்கொடைகள் வெளிநாட்டு நாணயங்களில் வழங்கப்பட்டாலும், அவை இலங்கை ரூபாயாக மாற்றப்பட்டு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
2025 ஆம் ஆண்டில் ‘தித்வா’ புயலுக்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகளுக்காக கூடுதல் மதிப்பீட்டின் மூலம் ரூ. 500 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதையும், அந்த நிதியின் பெரும்பகுதி இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அரசு, பொதுமக்களுக்கு பயனளிக்கும் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு இந்த நிதியை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து கவனமாக முடிவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் “எந்த விதமான பயமும் தேவையில்லை எனவும். இந்த பணம் ‘Rebuilding Sri Lanka’ நிதிக் கணக்கில் பாதுகாப்பாகவே உள்ளது,” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
‘Rebuilding Sri Lanka’ நிதியம், தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அரசால் உருவாக்கப்பட்டதாகும்.