”ஐக்கிய மக்கள் சக்தி கோரிய பாராளுமன்ற விவாதத்தை அரசாங்கம் நிராகரித்து விட்டது” – எதிர்க்கட்சி தலைவர்

பாராளுமன்ற அமர்வுகள் கூடியவுடன், இலங்கை இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக விவாதத்தை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சார்பாக நேற்றுக் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போது அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது. எனினும் குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்காது தற்போதைய அரசாங்கம் இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கடுவலை நகரில் நேற்று (28.04) இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு விழாவில் கலந்து கொண்ட சந்தர்ப்பத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நிதியை அங்கீகரித்தல், அதனை மேற்பார்வை செய்தல், நிதி சம்பந்தமான ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்தல் என்பன பாராளுமன்றத்திற்கு உரித்துடையதாக காணப்படுகின்றன. அதிகாரங்களுக்கிடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகள் ஒழுங்கில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே காணப்படுகின்றன. நமது நாட்டின் இறயாண்மைப் பொறுப்புகளை முன்னெடுக்கும் கடன் திட்டத்தின் தவணை செலுத்தும் சந்தர்ப்பமொன்றில் 25 இலட்சம் டொலர்களை இழந்தது மக்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். நிதி அமைச்சு மற்றும் நிதித்துறைக்குப் பொறுப்பான சகல அரச மற்றும் அரசியல் தரப்பினரின் வினைத்திறனற்ற தன்மையால் தான் இது நடந்தது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பது மிக முக்கியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

🟩 இழந்த பணம் தொடர்பில் விவாதிப்பது பாராளுமன்றத்திற்கு நல்லமில்லையா?

நிதிக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தரும் பாராளுமன்றத்திற்கு, அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதி காணாமல் போனது குறித்து விவாதிப்பது நல்லமில்லாத செயலாகவா அமைந்து காணப்படுகின்றது ? இதற்கு தடையா ?, இதற்கு இடமில்லையா ? என்று கேள்வி எழுப்புகிறேன். ஜனநாயக நாட்டில் சட்டவாக்கத்துறைக்கு இந்த கடமைகளை நிறைவேற்ற இடமளிக்காமல், சர்வாதிகாரத்தையும் தனிக் கட்சி ஆட்சியையும் முன்னிறுத்தி, தங்களது ஆதிக்கத்தைப் பரவலாக்குவதன் மூலம் ஜனநாயகம் சீரழகிக்கப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 அரசாங்கம், வெஸ்ட்மின்ஸ்டர் சம்பிரதாயத்தை பின்பற்ற விரும்பாதது ஏன்?

இழந்த இந்த 25 இலட்சம் டொலர் மோசடி குறித்த விவாதத்திற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் தராமை வருந்தத்தக்க விடயமாக காணப்படுகின்றது. இப்போதாவது இது குறித்து விவாதிப்பதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தர வேண்டும். நாட்டிற்காக அது நிறைவேற்றப்பட வேண்டிய கடமையாக அமைந்து காணப்படுகின்றன. வெஸ்ட்மின்ஸ்டர் சம்பிரதாயத்தை பின்பற்றும் நாடாக நாமும் இது குறித்து விவாதிக்க வேண்டும். ஜேவிபி அரசு இந்த வெஸ்ட்மின்ஸ்டர் சம்பிரதாயத்தை நடைமுறைப்படுத்த தயாராக இல்லாமை மிகவும் கவலையளிக்கும் விடயமாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 சர்வாதிகாரத்தை முன்னிறுத்தி ஜனநாயகத்தை இல்லாதொழிக்க இடமளியோம்!

மேலும் பல வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்து வருகின்றன. இவை குறித்து விவாதிக்க வேண்டும். இந்த 25 இலட்சம் டொலர் காணாமல் போன விடயத்தை இந்த அரசாங்கம் மாதக் கணக்காக வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்துக் கொண்டிருந்தது. ஜனாதிபதி தலைமையிலான அரசு, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்காமல், இந்த 25 இலட்சம் டொலர் இழப்பு குறித்து பாராளுமன்றத்தில் விவாதத்தை நடத்த சந்தர்ப்பத்தைத் தர வேண்டும். ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்து சர்வாதிகார நடைமுறைகளை பின்பற்றாமல் இருக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதச இங்கு மேலும் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version