பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை மத்திய, சபரகமுவ, கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் களுத்துறை, பொலன்னறுவ, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று (04.05) இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்கு மேல் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version