காணி தகராறு – மகளை கொன்ற தந்தை!

களுத்துறை வடக்கு பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த நிலத்தகராறு காரணமாக, தனது 35 வயது மகளைக் கொலை செய்ததாகக் கூறப்படும் 63 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போசிறிபுர பகுதியில் நேற்று (04.05)  இந்தச் சம்பவம் நடந்ததாகவும், இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதில் அப்பெண் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நில உரிமை தொடர்பாக நடந்து வந்த தகராறு முற்றியதைத் தொடர்ந்து, சந்தேக நபரான அப்பெண்ணின் தந்தை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக களுத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version