வியட்நாம் ஜனாதிபதிக்கு இலங்கையில் சிறப்பு வரவேற்பு!

வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் அவர்களுக்கு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில், இன்று (07.05) காலை ஜனாதிபதி செயலகத்தில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி லாம் மேற்கொள்ளும் இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தின் ஆரம்பமே இந்த உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வாக அமைந்துள்ளது.

கொடியரசுக் காவல் படையினரின் பாதுகாப்புடன் வந்த வியட்நாம் தலைவர், தேசிய கீதங்கள் இசைக்கப்படுதல் மற்றும் சம்பிரதாய துப்பாக்கி மரியாதை உள்ளிட்ட முழுமையான அரச மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார்.

இந்நிகழ்வில், அமைச்சர்களும், பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply