அம்பாறையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்!

அம்பாறை பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பாக சந்தேகநபரை கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (17.05) பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது சந்தேகநபர் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், கைது செய்யப்பட்ட பின்னர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர் மீண்டும் கைது செய்ய முயன்றபோது, பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதால் ஏற்பட்ட பதற்றத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version