”அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்தின் மீது விழுந்த பெரும் அடி” – சஜித் தெரிவிப்பு!

தற்போதைய அரசு IMF இலக்குகளை மீறி செல்வதற்கு முற்படுவதன் மூலம், இந்த தருணத்தில் வரி நிர்வாகத்திற்கும் குற்றச் செயல்களுக்கும் இடையே ஒரு தொடர்பு ஏற்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. ஏதாவது ஒரு தரப்பினர் மறந்துவிடுவதால், நோய்வாய்ப்படுவதால், வெளிநாடு செல்வதால் ஏற்படும் அதாவது வேண்டுமென்றே செய்யப்படாத அலட்சியத்தின் காரணமாக வரி நிர்வாக நிபந்தனைகளை நிறைவேற்றாமல் போவதை ஒரு குற்றச் செயலாகக் கருதும் வரி நிர்வாகத்தை அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கிறது. இது அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் நடவடிக்கையாக அமைந்து காணப்படுகின்றன. சிறையில் அடைப்போம் என்று மிரட்டுவதன் மூலம் வரிகளை அறவிடுவது ஜனநாயக விரோத செயலாகவும் அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசின் இந்த நடவடிக்கையானது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகவும், அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் நடவடிக்கையாகவும் அமைந்து காணப்படுகின்றன. வியாபார சமூகத்தை அச்சுறுத்துவதாகவும் இது அமைந்து காணப்படுவதோடு, புதிய தொழில்முயற்சிகள் உருவாகுவதற்கும், ஏற்கனவே தாபித்து காணப்படும் தொழில்முயற்சியாண்மைகளை விரிவுபடுத்துவதற்கும், புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வரி நிர்வாகம், தொடர்பான வரி நிபுணர்கள், தொழில்முனைவோர் மற்றும் இத்துறையோடு தொடர்புடைய ஏனைய பங்குதாரர்களுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்த புதிய வரிக் கொள்கை நீதித்துறை அதிகாரத்திற்கே சவால் விடுவதாக அமைந்து காணப்படுகின்றது.

அரசின் இந்த விதிகள் நீதித்துறை அதிகாரத்திற்கே சவால் விட்டு, அரசியலமைப்பையும் மீறும் விடயமாக அமைந்து காணப்படுகின்றன. அதிகாரங்களுக்கிடையிலான பொதுவான தடைகள் மற்றும் சமன்பாடுகள் என்ற கோட்பாடு மற்றும் முக்கிய ஜனநாயக நிறுவனங்களான சட்டவாக்கம், நிர்வாகம் மற்றும் நீதித்துறைகளுக்கிடையே அமைந்து காணப்படும் அதிகாரங்களுக்கிடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகள் என்பன இதனால் மீறப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது ஜனநாயகத்தின் மீது விழுந்த பெரும் அடியாகும்.

இச்சந்தர்ப்பத்தில், வரி செலுத்த வேண்டிய சகலரும் தமது வரிகளைச் செலுத்த வேண்டும். வரிகளைச் செலுத்தாது இழுத்தடிப்புச் செய்யும் வேலையைச் செய்யக் கூடாது. வரி வலைக்குள் அடங்கும் அனைவரும் கட்டாயமாக தமது வரிகளைச் செலுத்த வேண்டும். இதனை ஒரு குற்றச் செயலாகக் கருதுவது ஜனநாயகத்தின் மீது விழுந்த பெரும் அடியாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

Social Share

Leave a Reply