சேர் டேவிட் பெக்காம் பிரிட்டனின் முதல் பில்லியனர் விளையாட்டு வீரராக உயர்ந்துள்ளார் என இங்கிலாந்து ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அவரும் அவரது மனைவி விக்டோரியா பெக்கம் இணைந்து கடந்த ஒரு ஆண்டில் தங்களது செல்வத்தை இரட்டிப்பாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரபல தம்பதியின் மொத்த சொத்து மதிப்பு தற்போது £1.185 பில்லியனாக உயர்ந்துள்ளது. 2025ஆம் ஆண்டின் பட்டியலில் இவர்களின் சொத்து மதிப்பு சுமார் £500 மில்லியனாக மதிப்பிடப்பட்டிருந்தது.
David Beckham அமெரிக்காவில் மேற்கொண்ட முதலீடுகளே இந்த பெரிய அளவிலான செல்வ உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக லியனல் மெஸ்ஸி , Inter Miami CF அணியுடன் 2028 வரை ஒப்பந்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அணியில் பெக்கமின் பங்குகளின் மதிப்பு அதிகரித்துள்ளது.
மேலும், Inter Miami மைதானத்தை ஒட்டியுள்ள பெரிய சொத்து மேம்பாட்டு திட்டமும் அவருக்கு பெரும் வருவாயை ஈட்டித்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், Victoria Beckham நடத்தும் ஃபேஷன் நிறுவனத்தின் வருவாய் £100 மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக இரண்டு காற்பந்து ஜாம்பவான்களது இணைவு மேலும் பணத்தை இருவருக்கும் கொட்டியுள்ளது. மெஸ்ஸி வருடத்துக்கு 80 மில்லியன் டொலர் வருமானத்தை இந்த கழத்திலிருந்து பெறுகிறார்.