வான்வழித் தாக்குதல்களில் 175 பயங்கரவாதிகள் மரணம்!

நைஜீரியா மற்றும் அமெரிக்க பாதுகாப்புப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஐஎஸ் அமைப்பின் இரண்டாவது முக்கியத் தலைவர் அபு-பிலால் அல்-மினுகி உட்பட 175 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடகிழக்கு நைஜீரியாவில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்து இரு நாடுகளும் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.

2009 முதல் போகோ ஹராம் மற்றும் ஐ.எஸ் மேற்கு ஆப்பிரிக்க கிளை மேற்கொண்ட தாக்குதல்களில் 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version