செப்டம்பர் வரை மின்சாரக் கட்டண உயர்வு இல்லை – அமைச்சர் அருண தெரிவிப்பு!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டண உயர்வுக்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் எந்த கோரிக்கையும் விடுக்கப்படாது என அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21.05) உரையாற்றிய அவர், அண்மைய மின்கட்டண திருத்தத்தின் தாக்கம் மாதத்திற்கு 180 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மட்டுமே இருக்கும் என கூறினார்.

மேலும், மற்ற நுகர்வோரின் சுமையை குறைக்க அரசு 15 பில்லியன் ரூபாய் மானியம் வழங்கியுள்ளதாகவும், தற்போதைய நிலையில் மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்த திட்டமில்லை என்றும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version