நாட்டின் பல பகுதிகளில் தொடர் மழை!

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாக வலுப்பெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

சில பகுதிகளில் 200 மி.மீ.க்கு அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சியும், மற்ற சில பகுதிகளில் 100 மி.மீ.க்கு அதிகமான பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், பல பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 35–45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் பலத்த காற்றால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version