அத்தனகலு ஓயா ஆற்றின் நீர்மட்டம் உயர்வு – பொதுமக்களுக்கு அறிவுரை!

பலத்த மழை காரணமாக அத்தனகலு ஓயா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் சில பகுதிகளில் 200 முதல் 300 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனால் கம்பஹா, கந்தானை மற்றும் வத்தளை தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்கள் வானிலை மற்றும் வெள்ள நிலைமைகள் குறித்து தொடர்ந்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version