மட்டக்களப்பு – கொக்கடிச்சோலை – அம்பிளாந்துறை வீதி அபிவிருத்திப் பணிகள், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் (21.05) உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண நிதியத்தின் (EPC) கீழ் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கொக்கட்டிச்சோலை – அம்பிளாந்துறை வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது, மேலும் இந்த வீதியின் நீளம் 1500 மீட்டர் ஆகும்.
15 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த வீதிப் பணிகளை முடிக்க 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தித் திட்டம், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு, அப்பகுதியின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு புதிய பலத்தையும் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள் கலந்துகொண்டு அபிவிருத்தி பணிகளை ஆளுநருடன் இணைந்து ஆரம்பித்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.