கண்டி ரோயல்ஸ் அணியுடன் இணைந்தார் விஜய் சங்கர்!

இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரர் விஜய் சங்கர், எதிர்வரும் லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடருக்காக கண்டி ரோயல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.

35 வயதான அவர், அண்மையில் இந்திய உள்நாட்டு மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இந்திய அணிக்காக 12 ODI மற்றும் 9 T20I போட்டிகளில் விளையாடியுள்ள விஜய் சங்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட பல ஐபிஎல் அணிகளை பிரதிநிதித்துவப்படுத்திய அனுபவம் கொண்டவர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version