வெசாக் தானசாலைகளை முன்னெடுப்போருக்குக்கான விடேச அறிவிப்பு!

வெசாக் மற்றும் பொசன் பண்டிகைகளை முன்னிட்டு தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள், தங்களது பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என தொற்றுநோயியல் பிரிவின் விசேட சமூக மருத்துவ நிபுணர் மருத்துவர் திலங்க ருவன்பத்திரன தெரிவித்துள்ளார்.

தானசாலை நடைபெறும் இடம், ஏற்பாட்டாளர்களின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், பின்னர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தேவையான சுகாதார வழிகாட்டல்களை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் நிலையை கருத்தில் கொண்டு, இம்முறை தானசாலைகளில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குளிர்பானங்களுக்கு பதிலாக தேநீர், கோப்பி போன்ற கொதிக்கவைத்த நீரால் தயாரிக்கப்படும் பானங்களை வழங்குமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version