அஸ்வேசும நல உதவித் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கான மே மாத உதவித்தொகையை நாளை (29.05) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நல உதவிப் பயனாளிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ‘அஸ்வேசும’ திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ், தகுதியுள்ள சுமார் 700,000 பெரியவர்களுக்காக முந்நூற்று நாற்பத்தொன்பது கோடியே முப்பத்தொன்பது லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாய் (3,493,915,000.00) தொகையை அரசாங்கம் விடுவித்துள்ளது.