‘யாரும் செய்யாததை சாதித்து காட்டியுள்ளோம்’ – டக்ளஸ்

தமிழ் மக்களின் வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவரும் செய்யாதவற்றை சாதித்துக் காட்டியிருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளல் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் இன்று (15/12) ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் நலத் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்த தெரிவித்த அமைச்சர், ‘மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள ஒரேயொரு மாவட்டமாக கிளிநொச்சி இருக்கின்ற நிலையில், அதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருகாலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புக்களை ஏற்றுக்கொள்ளாது, மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயற்பட்டது. எனவே, ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தோம்.

கடந்த கால யுத்தங்களின் பாதிப்புகள் உங்களைப் போன்றே எமக்கும் இருக்கின்றது. ஆனால் அவற்றினால் எந்தவித நன்மைகளையும் நாம் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே இருக்கின்றதையாவது பாதுகாத்து எம்மை வளப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

அதேமாதிரி, எமது அரசாங்கமாக இருந்தாலென்ன, ஏனைய நாடுகளாக இருந்தாலென்ன, எமக்கு உதவ முன்வருவார்களாயின் நாம் அவற்றை பெற்று எம்மை

வளப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.

'யாரும் செய்யாததை சாதித்து காட்டியுள்ளோம்' - டக்ளஸ்

Social Share

Leave a Reply