இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் பங்களாதேஷ் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளருமான ரங்கன ஹேரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணியுடன் நியூசிலாந்துக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு இவ்வாறு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பங்களாதேஷ் கிரிக்கட் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.