தொடரை வெற்றியோடு ஆரம்பித்தது இந்தியா

இந்தியாவுக்கு எதிரான வேகமான சதம்.. மழை குறுக்கிட்ட போட்டியில் அதிரடி காட்டிய இந்தியா.

தரம்சலாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. மழை காரணமாக போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது 194 ஓட்டங்களை பெற்றது. இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 102(51) ஓட்டங்களையும், ஹஷ்மத்துல்லா ஷஹிதி 27 ஓட்டங்களையும், அஸ்மதுல்லா ஒமர்சை 26 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய பந்துவீச்சில் அறிமுக வீரர்களான ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் பிரார் தலா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். குர்பாஸின் 48 பந்துச் சதம் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவரின் அதிவேக ஒருநாள் சதமாகவும், இந்தியாவிற்கு எதிராக வேகமாக அடிக்கப்பட்ட ஒருநாள் சதமாகவும் பதிவாகியுள்ளது.

195 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய இந்தியா அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களையும், இஷன் கிஷன் 34 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்கயும் பெற்றனர்.

இந்தப் போட்டியில் சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3,000 ஓட்டங்களை மிக வேகமாக எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த போட்டியின் நாயகனாக ஷுப்மன் கில் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version