தமிழீழ விடுதலை புலிகள் எதிர்காலத்துக்கு பாவிப்பதற்க்காக மறைத்து வைத்ததாக பொலிஸார் சந்தேகிக்கும் ரி 56 ரக துப்பாக்கிகளுக்கு பாவிக்கும் ரவைகள்(குண்டுகள்) பளை, கொரக்கங்காட்டு பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டிடம் ஒன்றை கட்டுவதற்காக குழி தோண்டும் போது ஆயுத பொருட்களை அவதானித்த காணி உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து 1500 ரவைகள் முதற்கட்டமாக கைப்பற்றபட்டன. நீதிமன்றை உத்தரவை தொடர்ந்து இன்று நடைபெற்ற அகழ்வின் போது மேலதிகமாக 54,000 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
யுத்த காலத்தின் போது இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமெனவும், எதிர்காலத்தில் பாவிக்கலாமென்ற நோக்கில் இவை புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினரிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள் செயலிழப்பிற்க்காக கையளிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
