வெளிநாடு பறக்கும் எம்.பிக்கள்

குறைந்தபட்சம் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை இவ்வருட இறுதி விடுமுறை காலத்தை வெளிநாட்டில் கழிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுமுறைக் காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் உள்ளடங்குவதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளதாகவும், குறிப்பாக இந்த நாடுகளில் படிக்கும் அல்லது வசிக்கும் தங்கள் பிள்ளைகளைப் பார்ப்பதற்காகவும் பல எம்.பிக்கள் செல்லவுள்ளதாக அறியமுடிகிறது.

இதற்கிடையில், விடுமுறைக் காலத்தில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள எம்.பிக்களின் மற்றமொரு குழு, நுவரெலியாவிலுள்ள ஜெனரல் ஹவுஸில் முன்கூட்டியே முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் ஹவுஸ் என்பது நுவரெலியாவில் உள்ள ஒரு நாட்டுப்புற வீடு ஆகும். இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வசிப்பிடமாக அமைக்கப்பட்டுள்ளதுடன், டிசம்பர் 31ஆம் திகதி வரை அவ்வீடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version