‘பொது நிதியில் பணம் செலுத்தக் கூடாது’ – அநுர

சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுப்பனவை, வரி செலுத்தும் பொதுமக்களின் பணத்தில் இருந்து வழங்கக் கூடாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (16/12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.சீன உர நிறுவனத்திற்கான கொடுப்பனவை விவசாய அமைச்சர்கள் இருவரும் மற்றும் இரண்டு உர நிறுவனங்களின் தலைவர்களுமே செலுத்த வேண்டும் எனக் கூறினார்.

அத்துடன் பொது மக்கள் இதில் ஈடுபடாததால், பொது நிதியில் இருந்து பணம் செலுத்த அரசுக்கு உரிமை இல்லை என்றும் கொடுப்பனவுகள் எதுவாக இருந்தாலும்.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ மற்றும் இலங்கை உர நிறுவனம் மற்றும் கொழும்பு கொமர்ஷல் பெர்டிலைசர் லிமிடெட் ஆகியவற்றின் தலைவர்கள் தான் இதனை செலுத்த கடமைப்பட்டுள்ளனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

‘பொது நிதியில்  பணம் செலுத்தக் கூடாது' - அநுர
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version