நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு வெடிப்புக்கு காரணமான அமைச்சர்கள் மறைந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
சூரியவௌ பிரதேசத்தில் நேற்று (16/12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ‘இன்று மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், எப்போது கேஸ் சிலிண்டர் வெடிக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்த மாபெரும் குற்றத்திற்கு காரணமான அனைவருக்கும் எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதுடன், எனினும் குற்றவாளிகளைத் தண்டிக்க அரசாங்கத்திற்கு எந்தவொரு அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை’ என்றும் சுட்டிக்காட்டினார்.