சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் உட்பட தற்போதைய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 40 பேரின் நீர் கட்டணம், இதுவரை 10 மில்லியனுக்கு மேல் செலுத்தப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலுவையில் உள்ள 10 மில்லியன் ரூபாய் தொகையில், ஒரு எம்.பியின் நிலுவை தொகையே 1.8 மில்லியனாக இருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிலுவையில் உள்ள நீர் கட்டணங்கள் குறித்து விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்படுவதைத் தவிர, கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நீர் கட்டண சலுகைகளின் கீழ் எம்.பி.க்களின் செலுத்த தவறிய நிலுவை தொகையும் உள்ளடக்கப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து நிலுவைத் தொகையை மீட்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.