‘தீர்வு கிடைக்கும் வரை பின்வாங்கமாட்டேன்’ – ஜீவன் MP

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினருக்கும் அக்கரபத்தனை பிளான்டேஷனின் பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட முகாமைத்துவ தரத்திலான அதிகாரிகளுக்கும், இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (16/12) பிராந்திய தொழில் ஆணையாளர் தலைமையில் நேற்று ஹட்டனிலுள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில், அக்கரபத்தனை பிளான்டேஷனுக்குட்பட்ட தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன என சுட்டிக்காட்டியதோடு அதற்கு எதிராகவும், தமது தொழில் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன், நாளொன்றுக்கு 20 கிலோ பறித்தாக வேண்டும் என்பதோடு மாத்திரமல்லாமல், தோட்ட நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை என்றும் அதேபோல் தொழிற்சங்கங்களால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை நிர்வாகம் ஏற்கவில்லை என்றும் தெரிவித்து, உறுதியான இணக்கப்பாடின்றி பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

எனினும் இப்போராட்டத்தில் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தான் பின்வாங்கபோவதில்லை என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

'தீர்வு கிடைக்கும் வரை பின்வாங்கமாட்டேன்' - ஜீவன் MP
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version