LPL முதல் சுற்றின் இறுதி நாள் இன்று


லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகளின் இறுதி நாள் இன்று. இன்று இரண்டாவது போட்டி முக்கிய போட்டியாக அமையவுள்ளது.

பிற்பகல் 3:00 மணிக்கு காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் யாழ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

இரவு 7:30 இற்கு கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கண்டி வொரியர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுமணி நான்காமிடத்தை பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகும். தோல்வியடையும் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும்.
ஜப்னா கிங்ஸ் அணி முதலிடத்தை பெற்றுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று (16/12/2021) முதற் போட்டியாக கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய யாழ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றது. இதில் டொம் கொஹ்லர் – காட்மோர் 92(55) ஓட்டங்களையும், உபுல் தரங்க 37(33) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நவீன் – உல் – ஹவுக் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

194 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 15.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை பெற்றது. இதில் டொம் பண்டொன் 30(33 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஜெய்டன் சீலெஸ் 4 விக்கெட்களையும், விஜயகாந்த் வியஸ்காந்த் 3 விக்கெட்களையும், மகேஷ் தீக்ஷன 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

யாழ் அணி 102 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது

இந்த போட்டியின் நாயகனாக டொம் கொஹ்லர் – காட்மோர் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாவது போட்டியாக கண்டி வொரியர்ஸ் மற்றும் தம்புள்ள ஜியன்ட்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள ஜியன்ட்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய தம்புள்ள ஜியன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றது. இதில் ரமேஷ் மெண்டிஸ் 41(28) ஓட்டங்களையும், சசிச்த ஜயதிலக 34(40) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ, அல் -அமின் ஹொசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், நிமேஷ் விமுக்தி, ஷிராஸ் அஹ்மத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

131 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய கண்டி வொரியர்ஸ் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது. இதில் ரவி பொப்பரா ஆட்டமிழக்காமல் 59(50) ஓட்டங்களையும், அஞ்சேலோ பெரேரா அட்டமிழக்காமல் 29(22) ஓட்டங்களையும், கென்னர் லுவிஸ் 27(26) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இம்ரான் தாஹிர், ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

கண்டி வொரியர்ஸ் அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாணயகனாக ரவி போப்பரா தெரிவு செய்யப்பட்டார்.

LPL முதல் சுற்றின் இறுதி நாள் இன்று
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version