மண்ணெண்ணெய்க்கான நாளாந்த தேவை சுமார் 100 மெற்றிக் டொன்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது .
நாளாந்த சராசரி தேவை சுமார் 500 மெட்ரிக் டொன்களே என்றாலும், அதன் தேவை தற்சமயம் 600 மெட்ரிக் டொன்களாக உயர்ந்துள்ளது.
எனவே மண்ணெண்ணெய் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக, தேவையான மண்ணெண்ணையை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய மீனவ சமூகத்துக்கும் தேவைக்கேற்ப மண்ணெண்ணெய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.