மேல் மாகாணத்தில் வீதித் தடைகள் மற்றும் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் பொலிஸார் விசேட சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
பண்டிகை காலங்களில் நாளாந்தம் இடம்பெறும் குற்றங்களை தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த சோதனை நடவடிக்கை மூலமாக வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் சோதனையிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, நேற்றைய தினம் (18/12) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, 11, 162 வாகனங்களும் 15,685 நபர்களும் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
