கொவிட் வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரொன் பரவுவதற்கு நத்தார் காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் முக்கிய காரணியாக விளங்கலாம் என அமெரிக்காவில் உள்ள தொற்று நோய்கள் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் தலைவரும் வைத்தியருமான அந்தோனி பௌசி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் அதுபற்றி கருத்து தெரிவிக்கையில், “முழுமையாக தடுப்பூசி போட்டவர்களும் ஒமிக்ரொன் தொற்றினால் பாதிக்கப்படலாம்.
ஒமிக்ரொன் வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் ஒன்று காணப்படும் நிலையில், உலக நாடுகள் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதுடன் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அதேவேளை நெதர்லாந்தும் நத்தார் பண்டிகை கொண்டாட்டத்திற்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டினார்.