முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதல் கிலோமீட்டருக்கான அதிகபட்ச கட்டணத்தை 80 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேன தெரிவித்தார்.
அத்துடன் இரண்டாவது கிலோமீட்டரில் இருந்து அறவிடும் கட்டணத்தை 45 ரூபாவாகவும் அதிகரிக்க தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பேருந்த உரிமையாளர் சங்கத்தினரும் பேருந்த கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
