ஒப்பந்தம் நிறைவு

தமிழ் கட்சிகளின் பொது ஆவணம் தொடர்பான கூட்டம் நிறைவடைந்துள்ளது.

இன்று காலையில் இருந்து தாமதமான நிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட கூட்டம், கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைய தற்சமயம் நிறைவடைந்துள்ளதாக அறியமுடிகிறது.

அதற்கமைய பொது ஆவணம் மீதான வரைபும் முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முந்திய செய்தி

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான பொது ஆவணம் இன்றைய தினம் (21/12) கைச்சாத்தாகாது என அறியமுடிகிறது.

தொடர்ந்தும் தாமதமாகி வரும் கூட்டத்திலிருந்து தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் சி.வி விக்னேஸ்வரன் எம்.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி ஆகியோர் சற்று முன்னர் வெளியேறினர்.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பொது ஆவணம் ஒப்பந்தமாகாது என்பது உறுதியாகியுள்ளது.

அத்துடன் சி.வி விக்னேஸ்வரன் எம்.பி குறித்த கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்காத நிலையில், இரா.சம்பந்தனும் ஊடகங்களுக்கு மறுப்பு தெரிவித்து விட்டு வெளியேறினார்.

எனினும் பொது ஆவணம் தொடர்பான வரைபு பரிசீலனைக்காக விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

முந்திய செய்தி

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் ஒப்பந்தமாகும் என எதிர்பார்க்கப்பட்ட பொது ஆவணமானது, கட்சி பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமையால் இன்னமும் முழுமை பெறாதுள்ளது என நம்பமுடிகிறது.

இன்று (21/12) காலை 11 மணியளவில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் ஆரம்பமான கூட்டம் இதுவரை தீர்மானமின்றி தொடர்ந்த வண்ணம் உள்ளது.

மதியம் 1.30 மணியளவில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொது ஆவணம் மீதான மேலதிக கலந்துரையாடல்கள் இன்னமும் இடம்பெற்று வருகிறது.

அதனடிப்படையில் பொது ஆவண ஒப்பந்தம் இதுவரை நிறைவு செய்யப்படாதிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஒப்பந்தம் நிறைவு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version