லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்று சம்பியனாகியுள்ளது.
யாழ் அணி இரண்டாம் தடவையாக எல்.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டது.
கடந்த வருடம் போன்றே கோல் கிளாடியேற்றர்ஸ், ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையில் இறுதிப் போட்டி நடைபெற்றது.
முதலில் துடுப்பாடிய யாழ் அணி 20 ஒவர்களில் 3 விக்கட்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றது.
இதில் அவிஸ்க பெர்னாண்டோ 63(41) ஓட்டங்களையும், ரொம் கோலர் – காட்மோ ஆட்டமிழக்காமல் 57(41) ஓட்டங்களையும், ரகமுல்லா குர்பாஷ் 35(18) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மொகமட் ஆமிர், நுவான் திசர, சமிட் பட்டேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய காலி அணி 20 ஓவர்களில் 9 விக்கட்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது. இதில் தனுஸ்க குணதிலக 54(21) ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 39(28) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வனிது ஹசரங்க, சத்துரங்க டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்களை கைப்பற்றினார்கள்.