கொக்கிளாய் பிரதேசத்தில் கள ஆய்வில் ஈடுபட்ட சுரேன் எம்.பி

முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று (23/12) விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கள ஆய்வில் ஈடுபட்டார்.

இதன்போது, பிரதேசத்தின் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன், பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், தீர்க்கப்படாமல் உள்ள காணிப்பிரச்சினைகள், மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள், கல்வி, பாடசாலை அபிவிருத்தி போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

இது தொடர்பான விடயங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக சுரேன் ராகவன் எம்.பி பிரதேச மக்களிடம் உறுதியளித்தார்.

இதேவேளை, வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட தலைவர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது நேற்று வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட பார்த்தீபன், சுரேன் ராகவனால் கௌரவிக்கப்பட்டார்.

கொக்கிளாய் பிரதேசத்தில் கள ஆய்வில் ஈடுபட்ட சுரேன் எம்.பி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version