கனடாவில் தற்காலிகமாக குடியேறியுள்ளவர்களுக்கு அடுத்த வருடம் தமது நாட்டில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டில்,401,000 வெளிநாட்டினருக்கு அந் நாட்டில் “நிரந்தர குடியுரிமை” வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் தற்காலிக அடிப்படையில் நாட்டில் வசித்து வருவதாக கனடா குடிவரவு அமைச்சர் ஜோன் பிரேசர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கனடா தற்போது தனது மக்கள் தொகையை அதிகரிக்கவும், அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பயிற்சி பணியாளர்களை தமது நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.
கனடா நாட்டில் சிரேஷ்ட மக்கள்தொகை அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள நாடு என்று கூறப்படுகிறது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக, 2020 இல் 185,000 பேருக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. இது 2019 உடன் ஒப்பிடும்போது 45% குறைவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.