MBBS பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மாணவியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றை சேர்ந்த தமிழ் மாணவியான தணிகாசலம் தர்ஷிகா என்ற கொழும்பு பல்கலைக்கழகத்தில் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.

அதற்கமைய நேற்றைய தினம் (26/12) அவரது வீட்டில் வைத்து சாணக்கியன் எம்.பியினால் தர்ஷிகா பாராட்டப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டார்.

MBBS பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு
MBBS பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு
Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version