ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து விலகும் P.B ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய ஜனாதிபதியின் புதிய செயலாளராக முன்னராக ஊகிக்கப்பட்ட பிரதமரின் தற்போதைய செயலாளரான காமினி செனவிரதன் நியமிக்கப்படக்கூடுமென மேலும் தெரியவந்துள்ளது.
முந்திய செய்தி
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி P.B ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்களின் ஆட்சேபனைகளை அடுத்து, அவரை பதவி விலகுமாறு வலியுறுத்திய போதிலும், குறித்த இராஜினாமா ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தது.
இந்நிலையில், P.B ஜயசுந்தர மூன்று, நான்கு பக்கங்கள் கொண்ட தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும், தான் பதவியில் இருந்த காலத்தில் தான் எதிர்கொண்ட தடைகள் தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளதாகவும், தற்போது பதவி விலகுவதற்கு ஜனாதிபதியின் அனுமதியை கோரியுள்ளதாகவும் உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ராஜபக்ஷ குறித்த இராஜினாமாவை ஏற்றுக்கொண்டால், புத்தாண்டின் முதல் வாரத்தில் ஜெயசுந்தர பதவி விலக வாய்ப்புள்ளது என்றும் அவ்வெற்றிடத்திற்கு காமினி செனவிரத்ன நியமிக்கப்படுவார் என்றும் அறியமுடிகிறது.