திருமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு?

பல தசாப்தங்களாக சர்ச்சைக்குரியதாக இருந்த முக்கியமான ஒப்பந்த திட்டமான, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான நீண்டகால இழுபறி ஒப்பந்தத்தில் இலங்கை இந்தியாவுடன் கையெழுத்திடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் குறித்து, 16 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வரப்பட்ட நிலையில், தற்சமயம் திருகோணமலை திட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இந்தியாவுடன் இறுதி செய்ய உள்ளதாகவும், அதனை தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்தில் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படும் என தான் நம்புவதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு, Trinco Petroleum Terminal Ltd என்ற துணை நிறுவனத்தை உருவாக்குமாறு பணித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்நிலையில், குறித்த நிறுவனம் அமைக்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவையில் அமைச்சரவை அனுமதிக்கான பத்திரம் சமர்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு?

Social Share

Leave a Reply