சாணக்கியன் எம்.பியின் கடிதத்திற்கு ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்

கிரான்புல் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்தல் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அனுப்பிய கடிதத்துக்கான நடவடிக்கை தொடர்பான பதில் கடிதம் ஜனாதிபதி அலுவலகத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததன்படி, சந்தனமடு ஆற்றில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான மணல் அகழ்வு காரணமாக அந்த பிரதேசவாசிகளின் வயல்வெளிகளில் அதிகளவு நட்டம் ஏற்பட்டிருப்பதால், அப்பிரதேச மக்களால் 2015ஆம் ஆண்டு சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதத்தின் பலனாக மயிலவட்டான், இறங்குதுறை பிரதேசத்திலிருந்து சீத்தாண்டி, உப்பாறு பிரதேசம் வரை மணல் அகழ்தல் தடை செய்யப்பட்டது.

ஆனாலும் இரவு வேளைகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதால், மணல் அகழ்வுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கக்கூடாது என சாணக்கியன் எம்.பியினால் கோரப்பட்டிருந்தது. எனினும் அந்த மண் அகழ்வுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளரின் கடிதத்ததில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி இது தொடர்பாக பரிசோதனைகளை செய்து, கடிதத்தில் உள்ள விடயங்கள் உண்மையென நிரூபனமானால் உடனடியாக அதனை தடுத்து நிறுத்த வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அறியப்படுத்துகிறோம் என ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இனிவரும் காலங்களில் சட்டவிரோத மண் அகழ்தல் தமது பிரதேசத்தில் தடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக சாணக்கியன் எம்.பி, குறித்த பதில் கடிதம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

சாணக்கியன் எம்.பியின் கடிதத்திற்கு ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version