ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருக்கமைய சௌபாக்கியா வேலை திட்டத்தின் கீழ், தலவாக்கலை – லிந்துலை பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவு பொருட்களை பயன்டுத்தி சேதன பசளை தயாரிக்கும் நிலையம் நேற்று முன்தினம் (27/12) திறந்து வைக்கப்பட்டது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட மத்திய மாகாண ஆளுநர் லலித்.யூ கமகே மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோர் அதனை திறந்து வைத்தனர்.

