வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் தினசரி பதிவாகும் வீதி விபத்துகளின் காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு வைத்தியர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் விபத்துகள் காரணமாக வைத்தியசாலைகயில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 413 ஆக பதிவாகியிருந்த நிலையில், இவ்வருடம் 588 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version