இலங்கைக்கு வருகைதந்துள்ள குறிப்பிட்ட சில சீனப் பிரஜைகளால், இலங்கைப் பெண்கள் திருமணம் செய்யப்பட்டு, சீனாவில் பாலியல் தொழிலில் இணைக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கைப் பெண்களைத் திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக பாலியல் ரீதியான தொழிலில் ஈடுபடுத்தும் மோசடி தொடர்பில் விசாரணைகளை நடாத்த பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கெனவே கடத்திச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பத்து இலங்கைச் சிறுமிகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகச் சிரேஷ்ட பாதுகாப்புத் தலைவர் ஒருவர் தகவல் வழங்கியுள்ள நிலையில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அழகான இளம் பெண்களைத் தேர்வு செய்து, சீனர்கள் திருமணம் முடித்து சீனாவுக்கு அழைத்துச் சென்று இரவு விடுதிகளில் பணியமர்த்துவது தெரியவந்துள்ளது.
பரவலாக பேசுப்பொருளாகியுள்ள குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.