கடந்த 2021ஆம் ஆண்டில் சுமார் 120,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி 30,000 பேர் கட்டாருக்கும், 27,000 பேர் சவூதி அரேபியாவுக்கும், 20,000 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும், 1, 400 பேர் தென் கொரியாவுக்கும், 1, 100 பேர் சிங்கப்பூருக்கும், 1, 600 பேர் சைப்ரஸுக்கும், 800 பேர் ஜப்பானுக்கும் கொவிட் 19 பரவல் உள்ள காலப்பகுதியிலும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.