அவுஸ்திரேலியா – சிட்னியில் உள்ள இலங்கை துணை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி துணை தூதரக அலுவலக வளாகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக குறித்த அலவலகம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தொற்று நீக்கம் செய்யும் பணிகள் நிறைவடைந்த பின்னர் மீளவும் எதிர்வரும் 6ஆம் திகதி அலுவலகம் திறக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
