பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் மொஹமட் ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2003ஆம் ஆண்டில் சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர், தனது கிரிக்கெட் பயணத்தில் 18 வருடங்களை பூர்த்தி செய்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற டி20 உலக்கிண்ண அரையிறுதி போட்டி அவரது கடைசி ஆட்டமாக விளங்கியதுடன், இவர் இதுவரை 55 டெஸ்ட் போட்டிகள், 218 ஒருநாள் போட்டிகள், 119 டி20 போட்டிகளில் விளையாடி 12,780 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
பாகஸ்தான் அணிக்கான இவரது கிரிக்கெட் வாழ்க்கையில், பல்வேறு சந்தர்ப்பங்களில் சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கி போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. அத்துடன் பந்து வீச்சுகளின் போதும் பந்துவீச்சின் முரணான விதிமுறைகளின் காரணமாக பல தடவைகள் போட்டிகளில் இவர் தடை செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
