இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில், நடைபெற்ற இரண்டாவது 20-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி இலகுவான வெற்றியினை பெற்றுக்கொண்டது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை பெற்றது.
இதில் குசல் பெரேரா 30(25) ஓட்டங்களை பெற்றார். பானுக்க ராஜபக்ச 20(13) ஓட்டங்களை பெற்றார். சரித் அசலங்க 14 ஓட்டங்களையும், தசூன் சானக்க 10 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரப்ரைஸ் ஷம்சி 3 (4 – 20/3) விக்கெட்களையும், எய்டன் மார்க்ராம் 3(4-21/3) விக்கெட்களையும், ப்ஜோர்ன் போர்டியூன் 2 (4 -12/2) விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 14 ஓவர்களில் 01 விக்கெட்டை இழந்து 105 ஓட்டங்களை பெற்று 09 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இதில் குயின்டன் டி கொக்58(48) ஆட்டமிழக்காமல் ஓட்டங்களையும், எய்டன் மார்க்ராம் ஆட்டமிழக்காமல் 21(19) ஓட்டங்களையும் பெற்ற அதேவேளை ரீசா ஹென்றிக்ஸ் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிது ஹசரங்க 01 (4-22/1) விக்கெட்டினை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்கா அணி 2-0 என மூன்று போட்டிகளடங்கிய தொடரை வெற்றி பெற்றுள்ளது. நாளை மறுதினம் 14 ஆம் திகதி மூன்றாவதும் இறுதியுமான 20-20 போட்டி இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ளது.
இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி தோல்வியை சந்தித்துள்ளது. இலங்கையின் நுட்பங்கள் மிகவும் மோசமாக உள்ளமை தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் எந்தவித நுட்பங்களையும் இலங்கை அணியின் வீரர்கள் பாவிக்கவில்லை.
