பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று (04/01) இடம்பெறவிருக்கும் கலந்துரையாடலை தொடர்ந்து, தமது தொழிங்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த கலந்துரையாடல் இன்று முற்பகல் 11 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெறுமென வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
7 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்த தொழிற்சங்க போராட்டம் நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 24ஆம் திகதி கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதமருடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து தீர்மானிக்கப்படுமென அவர்கள் தெரிவித்திருந்தனர்.
கடந்த மாதம் 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் காரணமாக வைத்தியசாலைகளில் உரிய முறையில் வைத்திய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாது பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
