சிறந்த சுற்றுலாத் தளங்களில் இலங்கையும் ஒன்று

2022 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த 20 சுற்றுலாத்தளங்களில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்றினால் தயாரிக்கப்பட்ட சுற்றுலா நாடுகளுக்கான பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர், உலக நாடுகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் 20 நாடுகளில் ஒரு நாடாக இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.

குறித்த பட்டியலில், ஆன்டிகுவா மற்றும் பார்புடா தளமாக கொண்ட மேற்கிந்திய தீவுகள், லத்தீன் அமெரிக்க நாடான சிலி, பிரான்ஸ், கிரீன்லாந்து, பின்லாந்து, இத்தாலி மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், இலங்கையின் கவர்ச்சிகரமான கடற்கரைகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் சுவையான உணவுகள் பற்றி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த சுற்றுலாத் தளங்களில் இலங்கையும் ஒன்று
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version