மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமியார் பலி

குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பின் போது, மருமகனுடைய தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த மாமியார் உயிரிழந்துள்ளார்.

இவர் பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பதவியை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (02/01) திகதி பதவிய சுதர்சனாகம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உதாகல கம்மான, தோணிகல பகுதியை வசிப்பிடமாக கொண்ட 39 வயதுடைய பெண் ஓருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள கிராம சேவகர் அலுவலகத்துக்குச் சென்றிருந்த வேளையில் அவ்விடத்துக்குச் சென்ற உயிரிழந்த பெண்ணுடய மருமகன் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் பதவிய வைத்தியசாலையில் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய உயிரிழந்த 22 வயதான மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணையையும் முன்னெடுத்துள்ளனர்.

மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமியார் பலி
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version