‘அரசியல்வாதிகள் சொல்வதை செய்வதில்லை – சஜித்’

நாட்டின் அபிவிருத்தியினை முன்னோக்கிச் செல்வதற்கு நாட்டின் தேசிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

திருகோணமலைக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (04/01) திருகோணமலை சாம்பல்தீவு தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான டிஜிட்டல் கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘ஆட்சி செய்பவர்களிடம் ஊழல், கொலை மற்றும் கொள்ளை மக்களை ஏமாற்றுதல் போன்ற செயற்பாடுகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

நீங்கள் அனைவரும் ஊடகங்களின் ஊடாக அரசியல் பிரமுகர்கள் செய்யும் வேலைத்திட்டங்களை ஒவ்வொரு நாளும் பார்த்திருப்பீர்கள் 24 மணித்தியாலங்கள் 365 நாட்களும் பேசுவதற்கு சிறந்தவர்கள் அரசியல்வாதிகள். எவ்வளவுதான் பேசினாலும் நடைமுறைப்படுத்துவது என்பது குறுகிய வேலைத்திட்டங்களையே ஆகும். ஆனால் நாம் ‘பிரபஞ்சம்’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அரச பாடசாலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத் திட்டத்தினை செவ்வனே செய்து வருகின்றோம்.

மக்களுக்காக சேவை செய்வதற்காக 5 அல்லது 6 வருடங்களுக்கு காலக்கெடு தரப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்ப்பது சிறந்த ஒரு ஆட்சியாளர்களை அமைத்து நாட்டின் அபிவிருத்தி மற்றும் நாட்டின் சௌபாக்கியத்தை கட்டியெழுப்புவதையே.

ஆனால் மக்களை ஏமாற்றி தேர்தலில் வென்ற ஆட்சியாளர்கள் தற்காலிக சேவையாளர்கள் என்பதை மறந்து ஒருவரினால் எழுதி வைத்ததை நடைமுறைப்படுத்துவது போன்று செயற்படுவதையே எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது.

எனவே எமது ஆட்சியில் இவ்வாறான நபர்களுக்கு இடம் இல்லையெனவும், இனியும் அவ்வாறு நடக்க இடமளிக்கமாட்டோம் என்றும்; உறுதியளிக்கிறோம்’ என அவர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித், திருகோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

(திருகோணமலை நிருபர்)

'அரசியல்வாதிகள் சொல்வதை செய்வதில்லை - சஜித்'
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version